Coles

Loading Inventory...
11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

By None

Current price: $5.99
Visit retailer's website
11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

Coles

11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள்

By None

Current price: $5.99
Loading Inventory...

Size: Kobo eBook

Visit retailer's website
*Product information and pricing may vary - to confirm current pricing, availability, shipping, and return information please contact Coles. In the event of a pricing discrepancy, the retailer's price will apply.
விடாமல் அடித்துக் கொண்டிருந்த டெலிபோனை நோக்கிப் போனார் மெஹ்ரா. இடம்: அவருடைய பங்களாவின் தனியறை. நேரம் காலை பதினோரு மணி. மெஹ்ரா அறிவு ஜீவி. ஏராளமான ஐ.க்யூ. நாற்பத்து நான்கு வயதில் கடலளவு கம்ப்யூட்டர் ஞானம். மனித உடம்புகளைக் காட்டிலும் எந்திர உடம்புகளை நேசிப்பதில் ஆர்வம் அதிகம். போன வருடம் முதல் மனைவி சோபியா இறந்து போக அதைப் பற்றிக் கவலைப்படாமல் மறுமாதமே இருபத்தியோரு வயது ரெஜிதாவை - கல்யாணம் பண்ணிக் கொண்டவர். ரிஸீவரை எடுத்தார். "ஹலோ..." "மிஸ்டர் மெஹ்ரா...?" "எஸ்..." "நான் ராமபத்ரன். கம்ப்யூட்டரிங் டெக்னாலஜி காலேஜ் பிரின்சிபால்... போன மாதம் ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டோமே...?" "வணக்கம் ராமபத்ரன்... "வணக்கம்..." "என்ன விஷயம்...?" அடுத்த மாதம் கல்லூரியில் வெள்ளிவிழா. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம்..., ஆறு மணிக்கு நீங்கள் வந்திருந்து ஃபங்க்ஷனை நடத்தித் தர வேண்டும்..." "ஸாரி... ராமபத்ரன்! இன்னும் ஒரு ஆறுமாத காலத்திற்கு தான் விழாக்களிலும் திருமணங்களிலும் கலந்து கொள்ள இயலாது... வரப்போகிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ஒவ்வொரு தங்கத் துணுக்குக்குச் சமம்." "மாணவர்கள் உங்கள் வருகையை ஆவலாய் எதிர்பார்க்கிறார்கள். ஒரு அரைமணி நேரமாவது..." "ஸாரி... வெரி ஸாரி... வெள்ளி விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்." ரிஸீவரை வைத்து விட்டு திரும்பினார் மெஹ்ரா. அவருடைய அழகான இளம் மனைவி ரெஜிதா நின்றிருந்தாள். சல்வார் கம்மீஸ். கம்மீஸின் அடர்த்தியான கத்திரிப்பூ நிறம். அவளுடைய பவுன் நிற உடம்புக்குப் பாந்தமாய் பொருந்தியிருந்தது. "யார்கிட்டயிருந்து போன்...?" குரல் செர்ரிப்பழம். "கம்ப்யூட்டரிங் டெக்ஜாலஜி காலேஜ் பிரின்சிபால் பேசினார்..." "என்னவாம்..." "அடுத்தவாரம் காலேஜ் வெள்ளிவிழாவாம். மாட்டேன்னுட்டேன்..." "ஏன் போனா என்ன...?" "ப்ராஜக்ட்டை ஆறுமாசத்துக்குள்ளே. முடிக்க வேண்டாமா?" ரெஜிதா அவரை சமீபித்து – அவர் தோள்மேல் கையை வைத்தாள். "அது என்ன ப்ராஜெக்ட்கிறதை என்கிட்ட கூட சொல்லக் கூடாதா...?" "சொல்றேன்... ஃபினிஷிங் ஸ்டேஜ் வரட்டும்..." "இதையேதான் மூணுமாசமா சொல்லிட்டிருக்கீங்க... நான் உங்க மனைவி. எதிரி இல்லை. என்கிட்ட கூட சொல்லக் கூடாதா...?""நீயும் கம்ப்யூட்டரிங் சயின்ஸ் படிச்சவதானே?" "ஆமா..." "என்னவாயிருக்கும்ன்னு நீயே 'கெஸ்' பண்ணு பார்க்கலாம்..." "நான் ஏற்கெனவே கெஸ் பண்ணி வெச்சிருக்கேன்." "சொல்லேன் பார்க்கலாம்..." "மைக்ரோ ப்ராஸஸர் பேஸ்டு அன்இன்ட்ரப்டடட் பவர் சப்ளை யூனிட்தானே...?" மெஹ்ரா சிரித்தார். "அதெல்லாம் பிஸ்தா... ப்ராஜெக்ட்ல நான் இமய மலையை நினைச்சிட்டிருக்கும் போது... நீ பரங்கிமலையைப் பத்தி பேசிட்டிருக்கே..." ரெஜிதா குனிந்து - அவர் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டாள். "இன்னிக்கு நான் உங்களை விடப் போறதில்லை. அந்த ப்ராஜெக்ட் என்னங்கிறதை நீங்க சொல்லித்தான் ஆகணும்..." "கொஞ்சம் பொறு..." "பொறுக்க மாட்டேன்..." "அது ரகசிய ப்ராஜெக்ட்" "நான் உங்க ஒய்ப்..." "என்னோட அஸிஸ்டெண்ட் ராஜ்க்கு கூட நன் சொல்லலை..." "நானும் உங்க அஸிஸ்டெண்ட்டும் ஒண்ணா...?" சொன்னவள் மெஹ்ராவின் முகத்தை இரண்டு கைகளால் ஏந்தி நிமிர்த்தி அவர் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டு நெற்றியிலும் உதட்டிலும் தன் ஈரமான ஸ்பான்ஞ் உதடுகளை ஒற்றினாள். மெஹ்ராவின் உடம்பில் நெருப்பு பற்றிக் கொண்டது.

More About Coles at Pine Centre

Shop Coles for bestselling books, toys, stationary, and so much more!

3079 Massey Dr, Prince George, BC V2N 1R4, Canada

Find Coles at Pine Centre in Prince George, BC

Visit Coles at Pine Centre in Prince George, BC
Powered by Adeptmind